பிரதமர் மோடி அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழ் மொழி குறித்தும், தமிழர்கள் நலன் குறித்தும் பிரதமர் மோடி, வெளியிட்ட அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு
x
தமிழ் மொழி குறித்தும், தமிழர்கள் நலன் குறித்தும் பிரதமர்  மோடி, வெளியிட்ட அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிப்பதாக 
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் விமானங்களில் இனி தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்படும்  என்று பிரதமர் அறிவித்திருப்பது தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம் என தனது அறிக்கையில், ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு  எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழை தேசிய ஆட்சி மொழியாக்க வேண்டும், 7 தமிழர்கள் விடுதலை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை பிரதமர்  நிறைவேற்ற வேண்டும் என்று  ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்