"தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாது" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு தமிழை சிறப்பாக எடுத்துச் செல்ல இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாது - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
x
மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அங்குள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சி தொடர்பான நூல்கள் வைக்கப்பட்டவில்லை என்பதால் உரிய நடவடிக்ககை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு தமிழை சிறப்பாக எடுத்துச்செல்ல இயலாது என கூறினர். வெளிநாடுகளி்ல் தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சி கூட, தமிழகத்தில் எடுப்பதில்லை என்றும், தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் வளர்ச்சிக்காக தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கினால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் கருத்து தெரிவித்தனர். இதற்காக அனைத்து தமிழ் சேனல்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்