களைகட்டிய காளைவிடும் விழா : 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

வேலூரின் விரிஞ்சிபுரத்தில் காளைவிடும் விழா நடைபெற்றது.
களைகட்டிய காளைவிடும் விழா : 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
x
வேலூரின் விரிஞ்சிபுரத்தில் காளைவிடும் விழா நடைபெற்றது. இதில் காட்பாடி, கேவிகுப்பம், குடியாத்தம், உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்த்து மகிழ்ந்தனர். குறைந்த வினாடியில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்