பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு : அரசு மருத்துவமனைகளில் அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு : அரசு மருத்துவமனைகளில் அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் அரசு மருத்துவமனைகளில் 
பிரேத பரிசோதனைகள் முறையாக நடைபெறுவது இல்லை என்றும், பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பிரேத பரிசோதனை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், அதனை அறிக்கையின் ஒரு பகுதியாக வழங்கவும் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்