பிரியாணி மாஸ்டர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மதுரவாயலில் பிரியாணி மாஸ்டரை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பிரியாணி மாஸ்டர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
x
மதுரவாயலில் பிரியாணி மாஸ்டரை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மதுரவாயலை சேர்ந்த பிரியாணி மாஸ்டர் அப்துல் கரீம் என்பவர் மீது,  மதுரவாயல் கந்தசாமி நகரை சேர்ந்த வினோத் என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இந்த வழக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3 ல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றவாளி வினோத் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வினோத்திற்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் 

விதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்