"மருத்துவர்கள் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை என மிரட்டல்" - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ நிர்வாகம் புகார்

மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க தடை கோரிய வழக்கு.மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோரிக்கை
மருத்துவர்கள் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை என மிரட்டல் - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ நிர்வாகம் புகார்
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்க தடை கோரி, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பிரபல மருத்துவர்களை போதுமான கால அவகாசம் வழங்காமல், உடனே ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கட்டாயபடுத்துவதாக குற்றம் சாட்டிய அவர் தொடர்ந்து தனது வாதத்தை வைத்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்