நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் : 100 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் பெயரில் கட்டாய வசூல் செய்யுமாறு அதிகாரிகள் மிரட்டுவதாக பகுதி நேர ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் : 100 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் பெயரில் கட்டாய வசூல் செய்யுமாறு அதிகாரிகள் மிரட்டுவதாக பகுதி நேர ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில், தற்போது நெல் கொள்முதல் பணிகள் தீவிரமடைந்துள்ள  நிலையில்,  விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் மூட்டைக்கு தலா 5 ரூபாய் வசூல் செய்யுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக பகுதி நேர ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவ்வாறு வசூல் செய்யவில்லை என்றால் இடமாற்றம், தற்காலிக பணி நீக்கம் போன்ற  நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் கூறி  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு  உடனடியாக இதனை தடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்