மூங்கில் குச்சி குத்தியதால் கண்பார்வை பாதிப்படைந்த சிறுமி : சிகிச்சை உதவி கேட்கும் பெற்றோர்

விழுப்புரம் மாவட்டம் பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி காயத்ரி, சில நாட்களுக்கு முன்பு அங்கன்வாடி மையம் அருகே இருந்த வேலியில் தவறி விழுந்துள்ளார்.
மூங்கில் குச்சி குத்தியதால் கண்பார்வை பாதிப்படைந்த சிறுமி : சிகிச்சை உதவி கேட்கும் பெற்றோர்
x
விழுப்புரம் மாவட்டம் பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி காயத்ரி, சில நாட்களுக்கு முன்பு அங்கன்வாடி மையம் அருகே இருந்த வேலியில் தவறி விழுந்துள்ளார். அப்போது வேலியில் இருந்த மூங்கில் குச்சி கண்ணில் குத்தியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயத்ரியின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேல்சிகிச்சைக்கு உதவி கேட்டு சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்