2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் புகார் மனு

தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் புகார் மனு
x
அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் மனுவில்வாக்குகளை பெறவே 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படுவதாக அ.தி.மு.க பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பகிரங்கமாக பேசியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.சிறப்பு நிதி திட்டத்திற்கு எதிரானது அல்ல தி.மு.க என விளக்கியுள்ள அவர் அரசு  கருவூலநிதி,  ஆளும் அ.தி.மு.க கட்சியின் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.சிறப்பு நிதி திட்டத்தில் உள்ள சட்ட விரோத செயல்களை பரிசோதித்து நடவடிக்கை எடுப்பதோடு நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் புகார் மனுவில், ஆர்.எஸ்.பாரதி கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்