சூலூர் விமானப்படை பிரிவுக்கு விருது - விருதை வழங்கினார் குடியரசு தலைவர்

கோவை சூலூர் விமானப்படை பிரிவுக்கு, குடியரசு தலைவரின் கலர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
சூலூர் விமானப்படை பிரிவுக்கு விருது - விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
x
சூலூர் விமானப்படைதளத்திற்கு வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வீரர்களின் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் பேசிய அவர், இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும்  தேவைப்பட்டால் 
பாதுகாப்புக்காக ராணுவ நடவடிக்கையை எடுக்கும் எனவும் தெரிவித்தார். இந்திய  இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை பெரும்பணி ஆற்றி வருவதாகவும் குடியரசு தலைவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், நாட்டிற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கும் ராணுவ வீரர்களுக்கு தரும் கவுரவமாக விருதுகள் வழங்குவதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து, விமானப்படை பிரிவுக்கு கலர்ஸ் விருதை குடியரசு தலைவர் வழங்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

Next Story

மேலும் செய்திகள்