சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய அரசின் முதன்மை மாநில விருதை தமிழக அரசு தொடர்ந்து 4 வது முறையாக பெற்றுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
* சுகாதாரத்துறை சார்பில், கருவுற்ற பெண்களுக்கான தாய் சேய் நல பெட்டக திட்டம் துவக்க விழா மற்றும்  ஆயிரத்து 300 மருத்துவர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான பணி நியமனம் வழங்குதல் விழா, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில்  நடைபெற்றது.  

* கருவுற்ற பெண்களுக்கான தாய் சேய் நல பெட்டகம் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

* பின்னர் பேசிய, எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இதுவரை 28 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய அரசின், முதன்மை மாநில விருதை தமிழக அரசு தொடர்ந்து  4 வது முறையாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்