"தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது" - தமிழக தேர்வுத் துறை

தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என தமிழக தேர்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது - தமிழக தேர்வுத் துறை
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி தொடங்கி பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த மாதம் முழுவதும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வு மையங்களில் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள தேர்வுத்துறை, மின்தடை ஏற்படாதவாறு மின் வாரிய அதிகாரிகள் போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதை மீறி தேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்