நாட்டு வகை கன்னி நாய்கள் திருவிழா : 300க்கும் மேற்பட்ட கன்னி நாய்களுக்கு மரியாதை

கன்னி வகை நாய்கள் அழிவை தடுக்கும் நோக்கம்
நாட்டு வகை கன்னி நாய்கள் திருவிழா : 300க்கும் மேற்பட்ட கன்னி நாய்களுக்கு மரியாதை
x
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ஆமூரில் பாரம்பரிய நாட்டு வகை நாயான கன்னிவகை நாய்களுக்கான திருவிழாவாக கொண்டாடப்பட்டது. 
நாய் ஆர்வலர்களும், நாய் வளர்ப்போர்களும் மதுரை மாவட்டம் மேலூரில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக வரவழைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட கன்னி நாய்களுக்கு மேளதாளம் முழங்க மரியாதை அளித்து, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.கன்னி வகை நாய்கள் அழிவை நோக்கி செல்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்ததாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்