அகில இந்திய அளவில் நாய்கள் கண்காட்சி - பார்வையாளர்களை கவர்ந்த வெளிநாட்டு நாய்கள்

நாகர்கோவிலில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட கெனல் கிளப் நடத்திய இந்த கண்காட்சியில் 38 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.
அகில இந்திய அளவில் நாய்கள் கண்காட்சி - பார்வையாளர்களை கவர்ந்த வெளிநாட்டு நாய்கள்
x
நாகர்கோவிலில் இந்திய அளவிலான  நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட கெனல் கிளப்  நடத்திய இந்த கண்காட்சியில் 38 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.  ஜெர்மன் ஷெப்பர்டு,  லேப்ரடார், போமெரியன், ராட்டவீலர்  போன்ற வெளிநாட்டு நாய்களும், கோம்பை, சிப்பிப்பாரை, ராஜபாளையம், கன்னி போன்ற இந்திய வகை நாய்களும் பார்வையாளர்களை கவரும் விதமாக இருந்தன. 
குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க போலீசார் பயன்படுத்தும் நாய்களும் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.  கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு வேகமாக ஓடுதல், பந்தை கவ்வுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும்  வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்