"கால்நடைத் தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோடைக்காலத்தில் கால்நடைத் தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கால்நடைத் தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
கோடைக்காலத்தில் கால்நடைத்  தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், 2 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் ஆடுகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளில் வாழ்க்கைத் தரம் மேம்பட கால்நடைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்றும், கால்நடைத் துறை சார்பில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கும் பணி தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்