தேஜஸ் ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம்?

பிரதமர் மோடி தொடங்கி வைத்த தேஜஸ் அதி விரைவு சொகுசு ரயிலில் சர்வதேச தரத்திலான 22 சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
x
* சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், கடந்த நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட தேஜஸ் அதிவிரைவு ரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் உள்ளன 

* ஒவ்வொரு இருக்கையின் பின்புறம் சிறிய வீடியோ திரைகள், பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி டீ,காபி இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

* ரயில் பெட்டியில் ஜி.பி.எஸ் வசதி, எல்.ஈ.டி விளக்குகள் வசதியுடன், உள் மற்றும் வெளி புறத்தில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

* இருக்கைகளின் கைப்பிடியில் மடக்கும் வசதி கொண்ட சிற்றுண்டி மேசைகள், செல்போன் சார்ஜர் வசதிகள் உள்ளன.

* கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்ஈடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன. 

* வியாழக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்கள் இயக்கப்பட உள்ள தேஜஸ் ரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனக் கூறப்படுகிறது. 

* இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் செல்ல முடியும் என தெரிகிறது. 

* அமரும் வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்த  895 ரூபாயும், முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு ஆயிரத்து 940 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

* இதை தவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால்,  100 ரூபாய் முதல் 200  ரூபாய் வரை கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 





Next Story

மேலும் செய்திகள்