"15 நாட்களுக்கு குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்க மாட்டோம்" - நீதிமன்றத்தில் தெரிவித்த தேர்தல் ஆணையம்

குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
15 நாட்களுக்கு குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்க மாட்டோம் - நீதிமன்றத்தில் தெரிவித்த தேர்தல் ஆணையம்
x
குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுதொடர்பாக தாங்கள் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் தான் இதை தெரிவிக்க வேண்டும் என்றனர். இரட்டை இலை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்கு குக்கர் சின்னத்தை  யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி மேற்கோள் காட்டினார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை 15 நாட்களுக்கு யாருக்கும் வழங்க மாட்டோம் என தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்