12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகிறது
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல்  12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. 8 லட்சத்து 61  ஆயிரம்  மாணவ மாணவிகள் பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.  நாளை  தொடங்கும் பொதுத்தேர்வுகள் மார்ச் 19ம் தேதி முடிவடைகிறது.

அதைப்போல் மார்ச் 6-ம் தேதி முதல் 22ம் தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும்,  மார்ச் 14-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க  4 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வுகளை யொட்டி , சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் 12 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி தேர்வுகள் தொடர்பான புகார்கள் குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் பொதுமக்களும் தகவல்களை அளிக்கலாம் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்