மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்களுக்கு உள்ள சொத்துகள் எவ்வளவு ? - நீதிமன்றம் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்களுக்கு உள்ள சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்களுக்கு உள்ள சொத்துகள் எவ்வளவு ? - நீதிமன்றம் கேள்வி
x
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு சொத்துகள் உள்ளன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துகள் எவ்வளவு? அது யார் கட்டுப்பாட்டில் உள்ளது? எனவும் கேள்வி எழுப்பினர். இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் விவரம் குறித்தும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய் துறை,நகராட்சி நிர்வாகம் ஆகியோர் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்