அப்பல்லோ கோரிக்கை - ஆறுமுகசாமி ஆணையம் நிராகரிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரிய அப்பல்லோ மருத்துவர்களின் கோரிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்துள்ளது.
அப்பல்லோ கோரிக்கை - ஆறுமுகசாமி ஆணையம் நிராகரிப்பு
x
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரி அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர அனுமதி அளித்துள்ளது. சசிகலா தரப்பு குறுக்கு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் 7 பேர் இன்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் அவர்கள் ஆஜராகவில்லை. இதனிடையே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் இருப்பதால், மருத்துவர்கள் ஆஜராக தற்காலிகமாக விலக்கு அளிப்பதுடன், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரி அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் மனு செய்திருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்