முகிலன் காணாமல் போன விவகாரம் : ஸ்டெர்லைட் ஆலை அதிகாரியை விசாரிக்க வேண்டும் - வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

முகிலன் காணமல் போன விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை முதன்மை அதிகாரியை விசாரிக்க வேண்டும் என்று கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகிலன் காணாமல் போன விவகாரம் : ஸ்டெர்லைட் ஆலை அதிகாரியை விசாரிக்க வேண்டும் - வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
x
முகிலன் காணமல் போன விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை முதன்மை அதிகாரியை விசாரிக்க வேண்டும் என்று கோரி,  மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், கடந்த  15 ஆம் தேதி முதல் மாயமான நிலையில், அவரை கண்டுபிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பியதுடன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதாரத்தை வெளியிட்ட  முகிலன் காணமால் போனது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்