முகிலன் காணாமல் போன வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸ்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஆவணப் படத்தை, கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட பின்னர், மதுரை புறப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமானார்.
முகிலன் காணாமல் போன வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸ்
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஆவணப் படத்தை, கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட பின்னர், மதுரை புறப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமானார்.  இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,  இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என காவல் துறை இயக்குனர் டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்இன்று  சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். முகிலனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  முகிலனின் செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்ட பகுதியில், அவருக்கு  தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்