நீதிமன்ற வளாகத்தில் போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

கீழமை நீதித்துறைக்கு ஆளெடுப்பதாக கூறி, நீதிமன்ற வளாகத்திலேயே போலி நேர்முக தேர்வு நடத்திய சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி
x
செங்கல்பட்டு, சட்டப் பணிகள் ஆணை குழு கட்டிடத்தில், தாலுகா அளவிலான சட்டப் பணிகள் குழுவுக்கு இளநிலை உதவியாளர்கள் பணிக்கு  எடுப்பதாக கூறி, போலி நேர்முகத் தேர்வு நடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர்,  ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, நேர்முகத்தேர்வுக்காக 23 பேரை அழைத்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த மணி என்பவரை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது.அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே போலி நேர்முக  தேர்வு நடத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை இன்னும் கைது செய்யாத காவல் துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்