பெற்ற குழந்தைகளை கதற வைத்து ரசித்த கொடூர த‌ந்தை : கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள்

கள்ளக்குறிச்சியில் பெற்ற குழந்தைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு கொடுமைப்படுத்திய கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்ற குழந்தைகளை கதற வைத்து ரசித்த கொடூர த‌ந்தை : கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள்
x
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், வீரம்மாள் தம்பதிகளுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் வீரம்மாள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேசன், குழந்தைகளை கொடுமை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கேபிள் வயரால் கட்டி வைத்து அடிப்பது, பிறப்பு உறுப்பில் சூடு வைப்பது, குழந்தைகளின் முகத்தில் சிறுநீர் கழிப்பது என  வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு கொடுமைகள் செய்து வந்துள்ளார்.  கடந்த 12 ஆம் தேதியும் வழக்கம் போல வெங்கடேசன் தனது குழந்தைகளை கொடுமை செய்த நிலையில், குழந்தைகளின் கதறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்துள்ளனர். ஆனால் யார் பேச்சையும் பொருட்படுத்தாத வெங்கடேசன் தொடர்ந்து, குழந்தைகளை வயரால் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, காண்போர் அனைவரையும் கொந்தளிக்க செய்தன.

Next Story

மேலும் செய்திகள்