கொலை செய்யப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் - உறவினர்கள் போராட்டம்

நெல்லை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் - உறவினர்கள் போராட்டம்
x
நெல்லை மாவட்டம், கீழமுன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ராஜாமணி என்பவர் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஊருக்குள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் ஊர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் துணை ஆட்சியர் பழனிக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மக்களின் காத்திருப்பு போராட்டத்தால் அங்கு பதற்றமான நிலைநீடித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்