முன்னாள் முதல்வர் கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையம் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்

காரைக்கால் அண்ணா பல்லைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரு உருவ வெண்கல சிலை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையம் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்
x
விவாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமிழ் மொழிக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தன் வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்  கருணாநிதி என புகழாரம் சூட்டினார். தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கு பாடுபட்டது மட்டுமல்லாமல் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி பல திட்டங்களை கொண்டு வந்து தமிழக மக்கள் மனதிலும் கருணாநிதி இடம் பிடித்ததாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்