குடிபோதை கணவனின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை : குழந்தைகளின் கண்முன்னே தீக்குளித்த சோகம்

திருப்பூரில் முதல் கணவன் கைவிட்ட நிலையில், 2-வது கணவனும் குடிபோதையில் சண்டையிட்டதால் விரக்தியடைந்த பெண், தமது 4 குழந்தைகளின் கண்முன்னே தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதை கணவனின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை : குழந்தைகளின் கண்முன்னே தீக்குளித்த சோகம்
x
திருப்பூர் பி.என். ரோடு பகுதியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரேமா, குமார் தம்பதி 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக குமார் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்துவந்த பிரேமாவுக்கு, கட்டட தொழிலாளி அய்யச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு ஒருகுழந்தை உள்ளது. மதுபழக்கம் உள்ள அய்யச்சாமி, நேற்றும் குடித்துவிட்டு வந்ததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியடைந்த பிரேமா, 4 குழந்தைகளின் கண்முன்னே, தனது உடலில் மண்ணெண்னெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்பதற்குள் அவர் உடல்கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, 2-வது கணவன் அய்யச்சாமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்