சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சென்னையில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
x
சென்னையில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். காசிமேட்டில் தன் தாயுடன் வசித்து வரும் அந்த சிறுமி, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, துணிக்கடை பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அங்கு வந்த அதேப் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. அப்போது சிறுமி சத்தம் போட்டதை தொடர்ந்து அங்கிருந்து அவர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்