வயல்வெளியில் திடீர் தீ விபத்து : பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 20 ஆடுகள் தீயில் கருகி பலி

கும்பகோணம் அருகே ஏரகரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை விட்டிருந்தார்.
வயல்வெளியில் திடீர் தீ விபத்து : பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 20 ஆடுகள் தீயில் கருகி பலி
x
இந்நிலையில் வயல்வெளியில் திடீரென தீ பரவியதால் ஆடுகள் கலைந்து ஓட, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 20 ஆடுகள் தீயில் சிக்கியது. பட்டியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த 20 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்து விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் தீயை அனைத்தனர். போலீசார் விசாரணையில் வயலில் அறுவடை செய்து போடப்பட்டிருந்த வைக்கோலை எரித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்