முகிலன் காணாமல் போன விவகாரம் : சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முகிலன் காணாமல் போன விவகாரம் : சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு
x
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்ட அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து லயோலா மணி என்பவர் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர்கள் குழுவினர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர், காஞ்சிபுரம் எஸ். பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் முகிலன் காணாமல் போனது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்