பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - தொண்டு நிறுவனம் சார்பிலான திட்டத்தை ஆளுநர் துவக்கி வைத்தார்

அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - தொண்டு நிறுவனம் சார்பிலான திட்டத்தை ஆளுநர் துவக்கி வைத்தார்
x
அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார், சரோஜா மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடப்பு கல்வியாண்டிற்குள் 20ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்