கோடையில் தடையின்றி மின்சாரம் வழங்க என்ன நடவடிக்கை? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி

கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கோடையில் தடையின்றி மின்சாரம் வழங்க என்ன நடவடிக்கை? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி
x
மின் விநியோக பாதிப்பு, மின் துண்டிப்பு போன்ற  பிரச்சினைகளை தவிர்க்க பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டுச் செல்லும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரி சென்னையை சேர்ந்த தேசிகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் இயற்கை பேரிடர் காலத்தில் கூட பாதிப்பு ஏற்படாது எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்தை செயல்படுத்த மின்வாரியத்திடம் போதுமான நிதி உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? சூரிய ஒளி மின் உற்பத்தி எவ்வளவு? அந்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர். மேலும் இது தொடர்பாக மின்வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்