தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? - டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராக உத்தரவு

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ளதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என தஞ்சையை சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? -  டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராக உத்தரவு
x
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ளதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என தஞ்சையை சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து தமிழக உள்துறை  செயலர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டனர். தொடர்ந்து, தமிழகத்தில் 2016ம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? 2016க்கு பின்னர் எத்தனை கடைகள் மூடப்பட்டன? தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக  மூடப்படும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதுடன், டாஸ்மாக் தலைவர் மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்