வருகிற1-ஆம் தேதி முதல் ப்ளஸ்-டூ தேர்வுகள் துவக்கம் : தேர்வு பணிகளை கண்காணிக்க 23 அதிகாரிகள் நியமனம்

வரும் வெள்ளிக்கிழமை முதல் துவங்க உள்ள ப்ளஸ் டூ பொது தேர்வுகளை கண்காணிக்கும் பொறுப்பில்,23 அதிகாரிகள் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருகிற1-ஆம் தேதி முதல் ப்ளஸ்-டூ தேர்வுகள் துவக்கம் : தேர்வு பணிகளை கண்காணிக்க 23 அதிகாரிகள் நியமனம்
x
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். அந்த அரசாணையில், இணை இயக்குனர் அளவில் 19 அதிகாரிகள், 32 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜ் முருகன், ஈரோடு மாவட்டத்திற்கும்,  ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர்  நரேஷ்,  திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய  மாவட்டங்களுக்கும்,  தேர்வுத்துறை இணை இயக்குனர் சேது ராமவர்மா , கடலூர் மாவட்டத்திற்கும்,  தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி, மதுரை-தேனி மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த அளவில் தமிழகம் முழுவதும் தேர்வுப்பணிகளை கண்காணிக்க,  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்புசாமி உட்பட 4 இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்