கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் - ஜாமீன் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு விசாரணை தீர்ப்பை ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீன் ரத்தை எதிர்த்து மனோஜ், சயான் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் - ஜாமீன் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு விசாரணை தீர்ப்பை ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்
x
கோடநாடு கொலை, கொள்ளை  வழக்கில் ஜாமீன் ரத்தை எதிர்த்து மனோஜ், சயான் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக மேத்யூ சாமுவேலுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குக்கும், கொலை - கொள்ளை வழக்குக்கும் தொடர்பில்லை என்றார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரது நடவடிக்கையும், நீதித்துறை நிர்வாகத்தில் தலையிடும் வகையில் இருந்ததாலும், இருவரின் ஜாமினை, ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்

Next Story

மேலும் செய்திகள்