ஆஸ்கர் விருது பெற்ற PERIOD END OF SENTENCE:"இந்த விருது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை" - அருணாச்சலம் முருகானந்தம்

கோவையைச் சேர்ந்த தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் நடித்த PERIOD END OF SENTENCE என்ற ஆவண குறும்படத்துக்கு, ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
x
கோவையைச் சேர்ந்த தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் நடித்த PERIOD END OF SENTENCE என்ற ஆவண குறும்படத்துக்கு, ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஈரானிய - அமெரிக்க இயக்குனர் Rayka Zehtabchi இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்திய பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், ஏழை பெண்களுக்காக தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரது வாழ்க்கை வரலாறு 'பேட்மேன்' என்ற பெயரில் இந்தி திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து அவர் கூறும்போது, இந்த விருது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்