இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர் : பெட்ரோல் தீர்ந்ததால் மாட்டிக்கொண்ட திருடன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற போது பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர் : பெட்ரோல் தீர்ந்ததால் மாட்டிக்கொண்ட திருடன்
x
வீரப்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் குமரேஷ். இவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இதனை கண்ட குமரேஷ் சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் திருடனை விரட்டி சென்றனர். இந்நிலையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு பிரிவில் பெட்ரோல் இல்லாததால் வண்டியை நிறுத்தி விட்டு பெட்ரோல் டேங்க்கை திறக்க திருடன் முயற்சித்துள்ளான். அப்போது ரோந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவனை பிடித்து விசாரித்த போது,   இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.  மேலும் பின்தொடர்ந்து சென்ற குமரேசும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் இருசக்கர வாகன திருடனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் திருடன் ஒப்படைக்கப்படான். 

Next Story

மேலும் செய்திகள்