20 பேரின் உயிரை காப்பாற்றிய ஒற்றை ராட்சத மரம்

உத்திரபிரசேதம் மாநிலம் லக்னோவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 20 பேர் சுற்றுலாவிற்காக ஊட்டி வந்துள்ளனர்.
20 பேரின் உயிரை காப்பாற்றிய ஒற்றை ராட்சத மரம்
x
ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு வாடகை வேனில் கோவை நோக்கி அவர்கள் சென்றுள்ளனர். அப்போது குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது வேன் பிரேக் பிடிக்காததால், தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு 300 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் இருந்த ராட்சத மரம், தடுமாறி வந்த வேனை பள்ளத்தில் விழாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் வேனில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்