தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தின தொகுப்பாக, அவரது வாழ்க்கை பயணத்தை,பார்க்கலாம்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம்
x
பிப்ரவரி 24 -  ஜெயலலிதா பிறந்தநாள் கர்நாடக மாநிலம், மைசூரில் பிறந்தார் தாயார் வழியில் ஸ்ரீரங்கம் பூர்வீகம் தற்போதைய கர்நாடக மாநிலமான, அப்போதைய மைசூர் மாகாணத்தில், மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில், 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். ஜெ.ஜெயலலிதா என்று அனைவராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. ஜெயராம் -வேதவள்ளி தம்பதியரின் 2வது குழந்தையாக அவர் பிறந்தார் அவரது குடும்பம் மைசூர் அரசர் வம்சாவழியை சார்ந்தது. அவரது தாயார், தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தை பூர்விகமாக கொண்டவராவார்... ஜெயலலிதா தமது இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் தாயார் மற்றும் தாய்வழி தாத்தா - பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார் சட்டம் படிக்க விரும்பினார் - நடிக்க விருப்பமில்லை 
திரையுலகில் உச்சத்திற்கு சென்றார்சொந்தக் குரலில் பாடியும் அசத்தினார் திரைத்துறையில், அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இங்குள்ள 'சர்ச் பார்க் கான்வென்ட்டில்' தமது கல்வியைத் தொடர்ந்த ஜெயலலிதா, சட்டம் படிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவரது தாயார், திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், எம்.ஜி.ஆருடன் நடித்த ''ஆயிரத்தில் ஒருவன்'' திரைப்படம், அவரது புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது. பின்னாளில் முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்து, திரையுலகில் தனி முத்திரை பதித்தார். சொந்தக் குரலில் பல பாடல்களையும் பாடியுள்ளார் அரசியலில் நுழைவதற்கு முன்னர் இவர், 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். 1968ஆம் ஆண்டு Izzat என்ற இந்தி திரைப்படத்தில் ஜெயலலிதா நடித்தார் 1980ம் ஆண்டில் வெளியான "நதியை தேடி வந்த கடல்"  அவரது கடைசி திரைப்படமாகும் அதே ஆண்டில், அ.இ.அ.தி.மு.க. நிறுவனரான எம்.ஜி.ஆர், அவரை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய நாடாளுமன்றத்தில் செயல்பட வழிவகுத்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க., 2 அணியாக செயல்பட்ட போதும், பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளரானார். தமிழகமுதலமைச்சராக,தேர்தல்மூலம்4முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அரசியலிலும், அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் தேதி தமது 68வது வயதில் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

Next Story

மேலும் செய்திகள்