கும்பமேளாவுக்காக உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தற்காலிக நகரம்

பிராயக்ராஜில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்
x
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில, அர்த்த கும்பமேளா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருது. நாட்டின் பல பகுதிகள்ள  இருந்தும், வெளிநாடுகள்ள  இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வராங்க. மொத்தம் 45 நாள்  நடைபெறும் இந்த புனித நிகழ்ச்சிக்காக  3,200 ஏக்கரில  மிகப் பெரிய நகரத்தையே உத்தர பிரதேச அரசு உருவாக்கியிருக்கு. இந்த ஆண்டு கும்பமேள நிகழ்ச்சி மூலமா 1.20 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பை சிஐஐ வெளியிட்டுள்ள  நிலையில, அங்கு உருவாக்கப்பட்டுருக்கிற வசதிகள்ளாம் என்னென்னன்னு  பார்க்கலாமா.

செலவுகள்
 2013 ஆம் ஆண்டில நடந்த  கும்பமேளாவுக்காக 1,300 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில, இப்ப மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டு  4,200 கோடி ரூபாய் செலவிடப்படுது. 

தங்கும் வசதிகள்
கும்பமேளா நடைபெறும் இடத்தில,  22 மிதவைப் பாலங்களோட புதிய நகரமே உருவாக்கப்பட்டுருக்கு. இங்கு ஒரே நாள்ள 20,000 பேர் தங்கலாம். இதுதவிர முக்கிய பிரமுகர்களுக்குன்னு    5 நட்சத்திர ஓட்டல் வசதிகளோட,  4000 தற்காலிக வில்லாக்களும் அமைக்கப்பட்டுருக்கு.  

பொது வசதிகள்

கும்பமேளா நடைபெறும் இடத்தில 40,000 எல்ஈடி விளக்குகள், வை-ஃபை வசதி, 1 லட்சத்து 22 ஆயிரம் கழிவறைகள், 
 20,000 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுருக்கு.  20 ஆயிரம் குடிநீர் குழாய்களும்  பதிக்கப்பட்டுருக்கு.  

போக்குவரத்து
பக்தர்களோட வருகைக்கு  ஏற்ப புதிய விமான நிலையம், ஹெலிபேட் வசதிகள் செய்யப்பட்டுருக்கு. 9  ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதோட, ரயில் பாதைகள்  நான்கு வழிப் பாதையாக மாற்றப்பட்டுருக்கு. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 9  புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுருக்கு.  

பாதுகாப்பு வசதிகள் 
விழா நடைபெறும் இடத்தில 1,400 சிசிடிவி கேமராக்கள், பொருத்தப்பட்டுருக்கு. 30 ஆயிரம் சிறப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுருக்காங்க.  30 காவல் நிலையங்கள், 48 துணை மின் நிலையங்கள்,   தானியங்கி சிறப்பு வானிலை மையம்,  அவசர கால படகு சேவை மையங்கள்னு புது நகரம் களைகட்டுது.
இவ்ளோ விஷயங்கள் இருக்கு. இது மூலமா கண்டிப்பா வேலை வாய்ப்பு உருவாகியிருக்கும்லயா..6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கு. தங்குமிட சேவைகள் மூலம் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள், 45 ஆயிரம் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், 55 ஆயிரம் டாக்சி ஓட்டுநர்களுக்கு வேலை கிடைச்சிருக்கு.

பயன்பெறும் மாநிலங்கள்
கும்பமேளா நடக்கரது என்னமோ உத்திர பிரதேசம்னாலும், பக்கத்து மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரகாண்ட் , பஞ்சாப், ஹிமாசால் பிரதேசம், போன்ற மாநிலங்களும் பயனடைஞ்சிருக்குன்னு தான் சொல்லனும்.


Next Story

மேலும் செய்திகள்