பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக வாக்குவாதம் : திமுக நிர்வாகி சகோதரரை தாக்கிய அதிமுக எம்.பி.

திருச்சி பொன்மலைபட்டியில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, அதிமுக மாவட்ட செயலாரும் எம்.பி.,யுமான குமாருக்கும், திமுக பகுதி செயலாளர் தர்மராஜுக்கும் கடும் வாக்குவாதம் உண்டானது.
பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக வாக்குவாதம் : திமுக நிர்வாகி சகோதரரை தாக்கிய அதிமுக எம்.பி.
x
திருச்சி பொன்மலைபட்டியில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, அதிமுக மாவட்ட செயலாரும் எம்.பி.,யுமான குமாருக்கும், திமுக பகுதி செயலாளர் தர்மராஜுக்கும் கடும் வாக்குவாதம் உண்டானது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி தர்மராஜின் சகோதரர் பெரிசாமியை எம்.பி, குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிமுக, திமுக தொண்டர்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டிருந்த இரண்டு கட்சி தொண்டர்களையும் அப்புறப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக திமுக கட்சி அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்