மழை நீர் கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை : மீட்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மழை நீர் கால்வாயில் தவறி விழுந்து சிக்கிய காட்டெருமை உயிரிழந்தது
மழை நீர் கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை : மீட்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மழை நீர் கால்வாயில் தவறி விழுந்து சிக்கிய  காட்டெருமை உயிரிழந்தது. கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காட்டெருமை ஒன்று, மேய்ச்சலுக்காக வந்தது. அப்போது அங்கிருந்த சுமார் 2 அடி அகலமே உள்ள மழைநீர் கால்வாயில்  விழுந்து சிக்கி கொண்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியால் அதனை மீட்க முயற்சித்தனர். ஆனால் முயற்சி தாமதமடைந்ததால், காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து காட்டெருமையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்