தனியார் பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து கொலை...

கடலூர் அருகே பெண் கேட்டு சென்றபோது அசிங்கப்படுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர், பள்ளி ஆசிரியை ஒருவரை கொலை செய்துள்ளார்.
x
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரம்யா. அதே பகுதியில் உள்ள நர்சரி  பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இரண்டு ஆண்டுகளாக ரம்யாவை, கடலூர் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர்   ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 8 மாதங்களுக்கு முன், ரம்யாவை பெண் கேட்டு ராஜசேகர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது ரம்யாவின் பெற்றோர்,  ராஜசேகர் மற்றும் அவரது உறவினர்களை தங்கள் வீட்டிற்குள் விடாமல் வெளியிலேயே நிற்க வைத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள்ளேயே விடாததால், ரம்யாவை பார்த்து, 'உன்னை கழுத்தை அறுத்து கொன்று விடுவேன்' என ராஜசேகர் மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து 8 மாதங்கள் ஓடி விட்ட நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த ரம்யாவை பின் தொடர்ந்து சென்ற ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ரம்யாவை கொன்று விட்டு, தனது சகோதரியின் செல்போனுக்கு, தன்னை யாரும் தேட வேண்டம், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என குறுஞ்செய்தியை ராஜசேகர் அனுப்பிவிட்டு செல்போனை சுவிச் ஆப் செய்துள்ளார். ஒருதலை காதலால் நேர்ந்த இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து ராஜசேகரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்