மாணவர்களை மிரட்டும் பேருந்து நடத்துனர்கள்

நடத்துனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் : இலவச பஸ் பாஸ் வழங்க கோரிக்கை
மாணவர்களை மிரட்டும்  பேருந்து நடத்துனர்கள்
x
தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் நடப்பாண்டில் இன்னும் பல பள்ளிகளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனையடுத்து சீருடையில் பயணிக்கும் மாணவ மாணவிகள் அரசுப்பேருந்தில் பயணச்சீட்டு இன்றி செல்லலாம் என அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் அரசு பேருந்தில் செல்லும் மாணவர்களை நடத்துனர்கள் பலரும் டிக்கெட் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் டிக்கெட் எடுக்காத மாணவர்களை நடத்துனர்கள், அடிப்பதாகவும், பேருந்தை விட்டு பாதியில் இறக்கி  விடுவேன் என்று மிரட்டுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மாணவர்கள் இதுபோன்ற துயரங்களுக்கு ஆளாகாத வகையில் அனைவருக்கும் விரைந்து இலவச பஸ்பாஸ்களை வழங்க வேண்டும் என்றும் அதுவரை நடத்துனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்