விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்

திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார்.
x
திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார். ஜர்காப்பேட்டை சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று காலை சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். திண்டிவனம் அருகே, அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். கார் ஓட்டுனர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்