வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 திட்டம்: நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்

2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 திட்டம்: நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
x
மதுரையை சேர்ந்த தினேஸ் பாபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும்  திட்டம் பிப்ரவரி 24ல் தொடங்கி  பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நிறைவடையும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், 4 நாட்களில் உரிய பயனாளிகளைக் கண்டறிந்து வழங்க இயலாது என குறிப்பிட்டுள்ளார். கஜா புயல் பாதிப்பு தமிழகம் முழுவதும் ஏற்படாத நிலையில், அனைவருக்கும்  இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த சூழலில் வாக்காளர்களை கவரும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளதால், தேர்தல் முடியும் வரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரனைக்கு வர உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்