நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கால்நடைத் துறை அலுவலகத்தில் தட்டச்சராக 1983 ல் பணியில் சேர்ந்த நாகராஜ் என்பவர், 1988ல் ஆளுநர் அலுவலக உதவியாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தனி நிலை செயலாளராக பதவி உயர்வு வழங்க கோரி நாகராஜ் மனு அளித்ததை அடுத்து, மீண்டும் கால்நடைத் துறைக்கே மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், பணி மாற்றத்துக்கு நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்து. இந்த உத்தரவை எதிர்த்து ஆளுநர் அலுவலகம் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பணி நியமனம் குறித்த நீதிமன்ற உத்தரவை என கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாகராஜ் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், வேணுகோபால் அடங்கிய அமர்வு, மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலுக்கு உத்தரவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்