காங்கிரஸ் பிரமுகரின் வாகனம் திருட்டு : சி.சி.டி.வி.-யில் பதிவான காட்சிகள்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
காங்கிரஸ் பிரமுகரின் வாகனம் திருட்டு : சி.சி.டி.வி.-யில் பதிவான காட்சிகள்
x
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பேருந்து நிலையம் அருகே உள்ள நாச்சியப்பா வீதியில் நிறுத்திவிட்டு சென்றிருந்த அவரது வாகனம் காணாமல் போனதால், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அங்குள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 3 பேர், எவ்வித பதட்டமுமின்றி போலி சாவிகளை போட்டு வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்