இன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.
இன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
x
குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக  இன்று மதியம் சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் குடியரசு தலைவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.  பின்னர் ஆளுனர் மாளிகைக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு மதிய உணவை முடித்து விட்டு ஒய்வெடுக்க உள்ளதாக தெரிகிறது. 

பின்னர், மாலை 4 மணிக்கு தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் விழாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்கவுள்ளார். பின்னர் நாளை காலையில் ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லூர் செல்லும் ராம்நாத் கோவிந்த், பின்னர் சென்னை வழியாக தனி விமானத்தில் டெல்லிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்