சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறித்த வழக்கு : தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

கல்வித்தகுதி, பணிநியமனம் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சட்டப்பல்கலைக் கழகத்தின் 32 பேராசிரியர்களுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறித்த வழக்கு : தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
x
தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய சங்கர் தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றும் 32 பேராசிரியர்கள், தங்களின் கல்வித் தகுதி, நியமனம் குறித்த தகவல்களை பதில் மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகம் மற்றும் துணைவேந்தர் டி.என்.சாஸ்திரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு,  தனிப்பட்ட ஒரு நபரின் பணி நீக்கம் தொடர்பான வழக்கில், 32 பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக பதிலளிக்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது செல்லாது எனவும், வழக்கின் வரம்பை விரிவுபடுத்த முடியாது எனவும் கூறி, தனி நீதிபதியின்  உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்